ஆலோசனை
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு!
நன்றி குங்குமம் தோழி
* காலை வெறும் வயிற்றில் ‘நீராகாரம்’ சாப்பிட்டு வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.
* மதிய வேளையில் தேனை வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் இளைக்கும்.
* பெண்கள் பிரசவ காலத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே அரைச் சங்கு வீதம் துளசிச் சாற்றைக் குடித்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
* கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
* கல்யாண முருங்கை இலைச் சாற்றை தினமும் காலையில் தொடர்ந்து பத்து நாள் சாப்பிட்டு வர மாதவிலக்கு ஆவதற்கு முன்பும், மாதவிலக்கு ஆன பிறகும் ஏற்படும் கடுமையான வயிற்று வலி நீங்கும்.
* இரவு நிலக்கடலை சார்ந்த பண்டங்களை தின்னக் கூடாது.
* பேரீச்சம் பழத்தைக் கூழாக்கி பாலில் கொதிக்க வைத்து பருகி வந்தால் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் கை கால் மூட்டு வலி சரியாகும்.
* பழைய சோற்றில் நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும்்.
* அவசர அவசரமாகவும், பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது. வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது.
* மூட்டு வலிகளுக்கு சுக்கை அரைத்து பற்றுப் போடலாம். சுக்கை தாய்ப்பால் விட்டு மை போல் அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.
* பெண்கள் கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் பால் சுரக்கும்.
* சொறி, சிரங்கு மீது பூண்டு சாறு தடவ குணமாகும்.
* தொப்புளைச் சுற்றி தேனைத் தடவினால் உஷ்ண வயிற்றுவலி குணமாகும்.
* சீரகத்தை வறுத்துப் பொடி செய்து அதை வாழைப்பழத்துடன் சேர்த்துச் சாப்பிட நன்கு தூக்கம் வரும்.
* சர்க்கரையை நாக்கில் வைத்தால் தொடர் விக்கல் நின்று விடும்.
- இரா.ரெங்கசாமி, தேனி.