Dec 04, 2020
குற்றம்

மாநகர செய்தி துளிகள்...

போக்சோவில் முதியவர் கைது: சேலம் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அரும்பாக்கத்தில் உள்ள தனது தாத்தா ராமானுஜம்(62) என்பவர் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கினாள். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது பேத்திக்கு ராமானுஜம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் ராமானுஜத்தை கைது செய்தனர்.

8 பெண்கள் கைது: ஓட்டேரி வள்ளுவர் தெருவில் பணம் வைத்து சூதாடுவதாக ஓட்டேரி போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரியநாயகி(49). வேளாங்கண்ணி(36). ரேணுகா(37). வசந்தி(45). சீரணி(45). கலை(30). நூரி(45). சாந்தி(50) ஆகிேயாரை கைது செய்து ₹13 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

சிறுமி தீக்குளிப்பு: வியாசர்பாடி ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த 17 சிறுமி அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய்க்கு தெரியவந்து அவளை கண்டித்தார். இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு தனது அறையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாள். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  

கஞ்சா விற்ற பெண் கைது: புளியந்தோப்பு போலீசார் நேற்று ஓட்டேரி ஜமாலியா பேருந்து நிறுத்தத்தில் சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்த பெரியபாளையம் தச்சூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த பாக்கியம்(32) என்பவரை கைது செய்து அவரது கணவர் மணிவண்ணனை தேடி வருகின்றனர்.

வீட்டில் பாலியல் தொழில்: சைதாப்பேட்டை சுப்பிரமணியன் கோயில் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக சைதாப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில் மயிலாப்பூர் கபாலி தோட்டத்தை சேர்ந்த கீதா(36) என்பவர் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. அவரை கைது செய்து 3 இளம் பெண்களை மீட்டனர்.

கிளப் மேலாளர் கைது: எம்.ஜி.ஆர்.நகர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள கிளப்பில் பாலியல் தொழில் நடப்பதாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு போலீசார் கிளப் மேலாளர் அஜித்குமார்(23) என்பவரை கைது செய்து 2 இளம் பெண்களை மீட்டனர்.

3 கடைகளில் கொள்ளை: மதுரவாயல் எம்எம்டிஏ காலனியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மர்ம கும்பல்  அருகருகே இருந்த பெட்டிக் கடை, மளிகை மற்றும் பால் விற்பனை உள்ளிட்ட  கடைகளின் ெஷட்டர் பூட்டை உடைத்து ₹20 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையத்து சென்றது. புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.