Apr 11, 2021
குற்றம்

காரில் எடுத்து வந்த 176 பவுன் நகை பறிமுதல்

தர்மபுரி:  தர்மபுரி-சேலம் மெயின்ரோடு சேஷம்பட்டி பிரிவு சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே நகைக்கடை நடத்தி வந்த வினோத்(30) அந்த  வழியாக காரில் வந்தார். அவரது காரை சோதனையிட்ட போது அதில் மோதிரம், செயின், பிரேஸ்லெட் உள்ளிட்ட  நகைகள் இருந்தன. இரவு நேரத்தில் கடையில் போதிய பாதுகாப்பு இல்லாததால், நகைகளை ஒரு பேக்கில் வைத்து, வீட்டிற்கு  எடுத்து செல்வது வழக்கம் என்று தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் 176 பவுன் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.