குற்றம்
காஞ்சிபுரம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதப்படை காவலர் கைது..!!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மூதாட்டி யசோதாம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவலர் கைது செய்யப்பட்டார். கடந்த 29ம் தேதி தலையில் அம்மிக் கல்லை போட்டு மூதாட்டி யசோதாம்மாள் கொலை செய்யப்பட்டார். வழக்கு தொடர்பாக அவரது உறவினர் வழி பேரனான ஆயுதப்படை காவலர் சதீஷை போலீஸ் கைது செய்தது.