Dec 09, 2022
வர்த்தகம்

தங்கம் சவரனுக்கு ரூ.328 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.328 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. அதே நேரத்தில் அதிகரித்த வேகத்தில் குறைந்தும் வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,651க்கும், சவரன் ரூ.37,208க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.41 குறைந்து ஒரு கிராம் ரூ.4,610க்கும், சவரனுக்கு ரூ.328 குறைந்து ஒரு சவரன் ரூ.36,880க்கும் விற்கப்பட்டது. வரும் நாட்களில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.