Apr 04, 2020
கோலிவுட் செய்திகள்

விஜய் தேவரகொண்டா மீது தயாரிப்பாளர் புகார்

விஜய் தேவரகொண்டா. சமீபத்தில் தெலுங்கில் நடித்த வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தில் ராசி கன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா ஆகியோர் ஹீரோயினாக நடித்திருந்தனர். இப்படத்தை கே.எஸ்.ராமராவ் தயாரித்தார். அவர் கூறுகையில், ‘இப்படத்துக்காக விஜய் தேவரகொண்டாவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. சம்பள பாக்கிக்காக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள என் வீட்டை எழுதிக் கொடுத்தேன். இப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் விஜய் தேவரகொண்டா தலையிட்டு பல காட்சிகளை மாற்றினார்.

இதனால் படம் தோல்வி அடைந்து, பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இப்போது என்னிடம் வந்து பணத்தை திருப்பி கேட்கின்றனர். எனவே, என்னிடம் எழுதி வாங்கிய வீட்டை விஜய் தேவரகொண்டா திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நஷ்டத்தை ஈடு செய்ய முடியும்’ என்றார். இது குறித்து விஜய் தேவரகொண்டா தரப்பில் இன்னும் பதிலளிக்கவில்லை.