Apr 07, 2020
கோலிவுட் செய்திகள்

என் அழகை பற்றி கவலைப்படாதீங்க... ரசிகருக்கு ஓவியா டோஸ்

சமீபத்தில் தனது தலைமுடியை ஷார்ட்டாக வெட்டி, புதிய ஹேர் ஸ்டைலில் உள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார் ஓவியா. இதை பார்த்த பலரும் ஓவியாவின் ஹேர் ஸ்டைலை பாராட்டி இருந்தனர். ஒரு ரசிகர் மட்டும், ‘இந்த ஹேர் ஸ்டைலில் இருந்தால், கடை திறப்பு விழாவுக்கு கூட உங்களை கூப்பிட மாட்டாங்க’ என நக்கலாக கமென்ட் போட்டிருந்தார்.

இதை படித்துவிட்டு கோபமாகிப் போனார் ஓவியா. அந்த ரசிகருக்கு உடனே பதில் சொன்ன அவர், ‘என் அழகை பற்றி நீங்க கவலைப்படாதீங்க. நான் விக் கூட வச்சுக்குவேன். மூளையைத்தான் வளர்க்க விரும்புறேன், தலைமுடியை கிடையாது. இது எல்லாமே எனக்கான சுதந்திரம். அதனால் உங்க சுதந்திரத்தை பற்றி மட்டும் நீங்க கவலைப்படுங்க’ என கறாராக கூறியுள்ளார்.