May 22, 2022
கோலிவுட் செய்திகள்

அருவி இயக்குனருக்கு திருமணம்

2017ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் அருவி. இதனை இயக்கி இருந்தவர் அருண் பிரபு புருஷோத்தமன். அதன்பிறகு கடந்த ஆண்டு வாழ் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்த படம் குறித்து அவர் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அவர் டீனா என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த 21ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமண படத்தை அவரது நண்பர் யஷ்வந்த் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். அருண்பிரபுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.