Jul 07, 2022
கோலிவுட் செய்திகள்

யானையின் வருகை தள்ளி வைப்பு

ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள படம் யானை. இப்படத்தை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்துள்ளளது. ப்ரியா பவானி சங்கர் , ராதிகா, யோகிபாபு, கே.ஜி.எப். பட வில்லன் ராமச்சந்திர ராஜு, தலைவாசல் விஜய்,  ராஜேஷ், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம்  மே 6ம் தேதி வெளிவருவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தை திடீரென ஜூன் 17ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.