Nov 27, 2022
கோலிவுட் செய்திகள்

நாக சைதன்யா படத்துக்கு ஹாலிவுட் ஸ்டன்ட் டைரக்டர்

ஐதராபாத்: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்துக்கு ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் ஒப்பந்தமாகியுள்ளார். சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. தெலுங்கு, தமிழ் மொழிகளில் படம் உருவாகிறது. இதில் நாக சைதன்யா, கிரித்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். அபூரி ரவி வசனங்களை எழுதுகிறார்.

இந்த படத்தில் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு உருவாக்கப்படுகிறது. இதனால் வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகளாக இல்லாமல், ஹாலிவுட் தரத்துக்கு சண்டைக் காட்சிகள் இடம்பெற வேண்டும் என வெங்கட் பிரபு விரும்புகிறாராம். இதையடுத்து ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் யானிக் பென்னை இந்த படத்துக்காக தேர்வு செய்துள்ளனர். அவர் விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டன்கிர்க், பஃப்பலோ பாய், ஃபுரிஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் யானிக் பென் பணியாற்றியுள்ளார். பாலிவுட்டிலும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.