Oct 17, 2021
பிரசவ கால ஆலோசனை

கர்ப்ப கால முதுகுவலியைத் தவிர்க்க

* பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான
பொசிஷன்.

* உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து  உட்காருங்கள்.

* தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.

* பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.

* முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.

* கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.