அறிவியல்
வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள்: விஞ்ஞானிகள் தகவல்
லண்டன்: வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருக்கலாம் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், கார்டிப், எம்.ஐ.டி ஆகிய பல்கலைக்கழங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வீனஸ் கிரகத்தின் சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பூமியில் இருந்து வீனஸ் கிரகம் 47.34 மில்லியன் கி.மீ தூரத்தில் உள்ளது. சூரியனில் இருந்து 2வது கிரகமான வீனஸில் உயிர்கள் வாழும் சூழ்நிலை கிடையாது. இந்த கிரகத்தில் கந்தக அமிலம் அதிகமாக காணப்படுகிறது. எனவே, உயிர்கள் அங்கு வாழ முடியாது என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், வீனஸ் கிரகத்தில் உள்ள மேகங்களில் அம்மோனியா இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. கந்தக அமிலம் உள்ள கிரகத்தில் அம்மோனியாவும் இருப்பதற்கு வேதியியல் சான்றுகள் உள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் வில்லியன் பெய்ன்ஸ் கூறுகையில், ‘வீனஸ் கிரகத்தில் அம்மோனியா இருப்பது உண்மையானால், அங்கு நுண்ணுயிர்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது’ என்றார். மேலும், ஹைட்ரஜன் வாயு வீனஸ் கிரகத்தில் இருப்பதால் பூமியில் இருப்பதை போன்ற நுண்ணுயிர்கள் அங்கும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.