Jul 07, 2020
ஸ்பெஷல்

டாய்லெட் ஹோட்டல்

நன்றி குங்குமம் முத்தாரம்

மனிதக்கழிவு மாதிரி ஓட்டல்

தைவான் நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் மனிதக்கழிவு களான மலம் மற்றும் சிறுநீர் போன்ற மாதிரிகளால் உணவுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.  அங்கு வழங்கப்படும் ஜின்களும் சிறுநீர் நிறத்திலேயே இருக்குமாறு வடிவமைத்துள்ளார்கள். சாப்பிட்ட பின்னும் சாப்பிடும் முன்பும் கைகள் அலம்பும் இடம் வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லெட் பேஸின் போலவே உள்ளன. இதற்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பு அமோகம்.
 
விமானத்தின் மனிதக் கழிவு எங்கே போகிறது?

விமானம் பறக்கும்போது மனிதர்களால் வெளியேற்றப்படும் திட, திரவ கழிவுகள் அங்குள்ள பேஸினில் சேர்ந்துவிடும். பின்னர் அந்த கழிவுகள் விமானத்தின் வால் பகுதியின் அடியில் உள்ள ஸ்டீல் கன்டெய்னரில் சேமிக்கப்படுகிறது.
விமானம் தரை இறங்கியதும் அந்த கழிவுகளை விமான நிலையத்தில் உள்ள ‘ஹினிட்ரக்’ என்ற வாகனத்தின் வாயிலாக அகற்றி, வேறு ஒரு பைப் மூலமாக அந்த ஸ்டீல் கன்டெய்னரில் நீரை விட்டு சுத்தி கரிக்கின்றனர். இவ்வாறாகவே விமானத்தில் உள்ள மனிதக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

பெண் வயிற்றில் பாம்பு

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் பாட்ரிசியா. இவர் கடும் வயிற்றுவலியால் துடித்தார். உடனே அவரது கணவர் டேவிட் பாட்ரிசியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர் அந்தப்பெண் வயிற்றைப் பரிசோதித்தபோது அப்பெண்ணின் வயிற்றி னுள் ஏதோ இங்குமங்குமாக நெளிவதைக் கண்டார்.

டாக்டருக்கு குழப்பம் ஏற்படவே உடனே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார். அப்பெண்ணின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. உடனே அப்பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து அந்தப் பாம்பை வெளியே எடுத்தனர். வெளியில் சுதந்திரமாக வந்த பாம்பு உஸ் என சத்தத்துடன் வந்தது. டாக்டர் மற்றும் நர்ஸ் மயக்கமடைந்தனர்.

சில மாதங்களுக்கு முன் பாடரிசியா சுற்றுலா சென்றிருந்தார். அப்போது தண்ணீர் தாகம் எடுக்கவே அங்கு ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் உள்ள நீரை கையால் அள்ளிப் பருகி  உள்ளார். அந்த சமயம் தண்ணீரில் மிதந்து வந்த பாம்பு முட்டை ஒன்றும் அவர் வயிற்றுக்குள் தண்ணீருடன் கலந்து சென்றுவிட்டது. பின் அந்த முட்டை உடைந்து பாம்புக் குட்டி வயிற்றுக்குள் வளர்ந்துள்ளது.
 
உப்பு படிவம்


ஜோர்டானில் டெட்சீ என்ற கடலில் உப்புப் படிவம் அதிகம் உள்ளது. இதனால் மனிதர்கள் எவ்வித பாதுகாப்பு  ஜாக்ெகட்டும் இல்லாமல் இதில் மிதக்கிறார்கள். இந்தக் கடலின் அடியில் பாறை கள்  உள்ளன. இங்குள்ள தண்ணீர் நீலநிறத்திலும் மற்றும் பச்சை நிறத்திலும் உள்ளது.

பைன் பிலிடா

1930-ம் வருடத்தில் போலந்தில் உள்ள ஒரு காட்டில் ‘பைன் பிலிடா’ என்ற வகையிலான 100 மரங்கள் இருந்தன. இந்த மரங்கள் தரையிலிருந்து பக்கவாட்டில் வளர்ந்து மேல் நோக்கி கூராக வளர்ந்துள்ளன.

நீர் விரதம்

நீர் விரதத்தில் தண்ணீர் மட்டுமே சாப்பிட வேண்டும். இந்த விரதத்தை 24 மணி முதல் 72 மணி நேரம் வரை கடைப்பிடிக்கலாம்.

நீர் விரதம் இருப்பதால் உடலில் இன்சுலின் சென்சிட்டி விட்டி அதிகரித்து சர்க்கரை நோயும், உடல் பருமனும் குறையலாம்.உடலுறுப்பில் பசி உண்டாக லெப்டின் என்ற ஹார்மோன் சுரக்க வேண்டும். இந்த சுரப்பு குறைந்தாலும் நீர் விரதத்தால் உடல் தன்னைத்தானே சுத்தப் படுத்திக்கொள்ளும்.

நீர் விரதம் வாரத்தில் ஒன்று அல்லது இருமுறை இருக்கலாம். இவ்விரதத்தால் இதய நோய் பாதிப்பு குறையும். இவ்விரதத்தை மருத்துவரின் ஆலோசனை பெற்றபின் மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்றி விரதம் மேற்கொள்ளக்கூடாது.