Apr 05, 2020
தமிழகம்

நாகர்கோவில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 பெண்கள் உட்பட 10 பேர் அனுமதி

நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 பெண்கள் உட்பட 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட 10 பேரின் ரத்தமாதிரி எடுத்து ஆய்வகத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே 34 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.