தமிழகம்
சென்னையில் 417 இடங்களில் மழைநீர் முழுமையாக வெளியேற்றம்: சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னையில் 417 இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 51 இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தண்ணீர் வெளியேற்றும் பணியில் 900 கனரக மோட்டார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தியாகராய மேட்லி சுரங்கப்பாதையில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் வெள்ளத்தை அகற்றும் பணிகள் தொடர்கின்றன.