Apr 04, 2020
தொழில்நுட்பம்

மலிவு விலையில் 5G போன்

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகின் ஐந்தாவது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனம் ‘ஓப்போ’. இந்தியாவில் தனக்கென கணிசமான வாடிக்கையாளர்களைத் தன்வசமாக்கிவிட்ட இந்நிறுவனம், சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஸ்மார்ட்போன்  மட்டுமல்ல,  ஹோம் தியேட்டர், ப்ளூ ரே பிளேயர் உள்ளிட்ட பல ஆடியோ-விஷூவல் சாதனங்களையும் தயாரிக்கிறது ‘ஓப்போ’. சீனாவில் மட்டுமே ‘ஓப்போ’விற்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான அவுட்லெட் விற்பனையகங்கள் இருக்கின்றன. இதன் சமீபத்திய வரவு ‘PCLM50’. இந்த மாடல் 5ஜி நெட்வொர்க்கிலும் இயங்கும் என்பது தனிச்சிறப்பு. கருப்பு, வெள்ளை, மஞ்சள் என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளியாகிறது. இதன் கவர்ச்சியான வடி வமைப்பு வாங்கத் தூண்டுகிறது. இதன் அம்சங்களையும் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.4 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டியுடன் மெகா டிஸ்பிளே, 1800x2400 பிக்ஸல் ரெசல்யூசன், வேகமான செயல்திறனுக்காக 8 ஜிபி ரேம், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு வகையான ஸ்டோரேஜ்கள், 48 எம்பியில் முதன்மையான கேமரா, 8 எம்பியில் செகண்டரி கேமரா, 2 எம்பியில் இரண்டு கேமராக்கள் என குவார் செட்-அப்பில் நான்கு பின்புற கேமராக்கள், செல்ஃபி மற்றும் வீடியோ கால் களுக்குத் தனியாக 32எம்பியில் ஒரு கேமரா,  3,935 mAh பேட்டரி திறன், 180 கிராம் எடை என அசத்துகிறது இந்த போன். விலைமலிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போன் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.