Dec 05, 2020
தொழில்நுட்பம்

சோனி நிறுவனத்தின் புத்தம் புது தயாரிப்பு: அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Sony Xperia 5 II

சோனி நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. Sony Xperia 5 II எனும் குறித்த கைப்பேசியானது 6.1 அங்குல அளவு, 2520 x 0180 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Snapdragon 865 Processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 128GB அல்லது 256GB சேமிப்பகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா மற்றும் தலா 12 மெகாபிக்சல்களை உயை 3 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் அன்ரோயிட் 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 4000 mAh மின்கலம், Finger Print Sensor ஆகியனவும் காணப்படுகின்றன. எனினும் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.