Jan 25, 2021
தொழில்நுட்பம்

பியாஜியோ பிவர்லி 300 சிசி, 400சிசி ஸ்கூட்டர்கள்


300 மற்றும் 400 சிசி திறன்களில் புதிய பியோஜியோ பிவர்லி ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு இன்ஜின்களுமே 4 ஸ்டிரோக், 4 வால்வ் சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல் இன்ஜின்கள். முந்தைய மாடல்களை விட 300 சிசி திறன் 23 சதவீதம், இதுபோல், முந்தைய 350 சிசிக்கு மாற்றாக 400 சிசி இன்ஜினுடன் மற்றொரு மாடல் வந்துள்ளது. முன்புறம் 16 அங்குலம், பின்புறம் 14 அங்குலம் கொண்ட அலாய் வீல்கள், மோட்டார் சைக்கிளில் செல்லும் அனுபவத்தை வழங்கும் என்கிறது அந்த நிறுவனம். இதுபோல், கீலெஸ் சிஸ்டம், 5.5 அங்குல எல்சிடி பேனல், புளூடூத் இணைப்பு என ஸ்கூட்டர் பிரிவில் அதிக திறன் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் கலவையாக வருகிறது. விலை விவரம் வெளியாகவில்லை.