Feb 28, 2021
தொழில்நுட்பம்

சோனி பிளே ஸ்டேஷன் 5 (விலை சுமார் ரூ.39,990 முதல்)

சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 அறிமுகம் செய்கிறது. இதன் டிஜிட்டல் மட்டும் கொண்ட வேரியண்ட் ₹39,990 எனவும், ரெகுலர் எடிஷன் ₹49,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதிதான் இது விற்பனைக்கு வருகிறது.  இந்த பிளே ஸ்டேஷன் ஏஎம்டி ஜென் 2 சிபியு உடன் வருகிறது. விளையாட்டு பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பிளே ஸ்டேஷனுக்கு வரும் 12ம் தேதி முதல் முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்.