Nov 27, 2022
தொழில்நுட்பம்

எலக்ட்ரிக் சைக்கிள்கள்

எலக்ட்ரிக் வாகனங்களில், எலக்ட்ரிக் சைக்கிள்களும் சற்று பிரபலமாகி வருகின்றன. தினமும் அருகில் உள்ள இடங்களுக்கு சென்று வருபவர்களுக்கும், சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற யோசிப்பவர்களுக்கும் இந்த எலக்ட்ரிக் சைக்கிள்கள் சிறந்த தேர்வாக உள்ளது. கீழ்க்காணும் இந்திய தயாரிப்பிலான 5 எலக்ட்ரிக் சைக்கிள்கள், ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 45 கி.மீ முதல் 100 கி.மீ வரை செல்லக்கூடியவை. சாதாரண சைக்கிளை போல ஓட்டி வந்து விடலாம்.

இ-மோட்டோராட் இஎம்எக்ஸ்

இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 45 கி.மீ தூரம் வரை செல்லலாம். கழற்றி சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி, டிஸ்க் பிரேக்குகள், எல்இடி ஹெட்லைட் உள்ளன. விலை: ரூ.58,999

ஹீரோ லெக்ட்ரோ வின்-எக்ஸ்

இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 முதல் 75 கி.மீ தூரம் வரை செல்லலாம். லக்கேஜ் வைத்துக் கொள்ள பின்புறம் பெரிய கேரியர்கள் உள்ளன. விலை: ரூ.44,419

டாட்சி எலக்ட்ரிக் ஹீலியோ எம்200

இதில் 10.4ஏஎச், 36 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. பெடலுடன் சேர்த்து பயன்படுத்தினால் 60 - 80 கி.மீ வரையிலும், இல்லாவிட்டால் 25 கி.மீ தூரம் வரை செல்லலாம். விலை: ரூ.57,900

போலாரிடி ஸ்மார்ட் எக்ஸ்கியூட்டிவ் எஸ்கே2

அதிகபட்சமாக 70 கி.மீ வேகம் வரை செல்லும். ஒரு முறை சார்ஜ் செய்து, அவ்வப்போது பெடல் செய்தால் 80 கி.மீ வரை செல்லலாம். விலை: ரூ.70,000

நெக்சு ரோட்லார்க் பாஜிங்கா

ஒரு முறை சார்ஜ் செய்தால்,பெடலுடன் சேர்த்து பயன்படுத்தும்போது 100 கி.மீ தூரம் வரை செல்லலாம். டூயல் பேட்டரி உள்ளது. பெடல் இல்லாமல் மோட்டார் மூலம் மட்டும் 70 கி.மீ தூரம் செல்லலாம். விலை: ரூ.46,999.