Feb 05, 2023
தொழில்நுட்பம்

765 எல்டி ஸ்பைடர் சூப்பர் கார்

சூப்பர் கார் தயாரிக்கும் நிறுவனமான மெக் லாரன், தனது முதலாவது டீலர்ஷிப்பை மும்பையில் சமீபத்தில் துவக்கியது. இந்தியாவில் இந்த நிறுவனம் துவக்கியுள்ள முதல் ஷோரூம் இது. இதையொட்டி 765 எல்டி ஸ்பைடர் என்ற சூப்பர் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.. இதில் 4.0 லிட்டர் டிவின் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 765 பிஎஸ் பவரையும் 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

765 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பப்படும் எனவும், இந்தியாவில் இளம் பணக்காரர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், ஷோரூம் விலையாக சுமார் ரூ.12 கோடி என நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அதிக விலையுள்ள காராக இது  இருக்கும்.