Mar 29, 2020
விமர்சனம்

தி கிரட்ஜ் - விமர்சனம்

சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் நிக்கோலஸ் பெஸ்க் இயக்கத்தில் ஆண்ட்ரியா ரைஸ் போரப், டெமியன் பிக்கிர், ஜான் சோ  பெட்டி பின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'தி கிரட்ஜ்'. காட்டுக்குள் நடந்த ஒரு துர்மரணம் அதை தொடர்ந்து நடக்கும் இன்வெஸ்டிகேஷன். இந்த இன்வெஸ்டிகேஷன் குறித்து ஆராய ஒரு வீட்டிற்கு செல்கிறார் நாயகி ஆண்ட்ரியா. அந்த நிமிடம் முதல் அவரை துரத்துகிறது அமானுஷ்யம் ஒருபக்கம் சின்னச்சின்ன மர்மக்கதைகள் மரணத்தில் முடிவு, இன்னொருபக்கம் இன்வெஸ்டிகேஷன், மற்றொருபுறம் நாயகிக்கு அமானுஷ்ய உருவங்களின் தொல்லைகள் முடிவு என்ன என்பது ஹாரர் திகில் கிளைமாக்ஸ்.

2000 ஆரம்பத்தில் வந்த இதன் முந்தைய பாகங்களை காட்டிலும் இந்த பாகம் சற்றே அப்டேட் வெர்ஷனாக இருக்கிறது. கான்ஜுரிங், இன்சிடியஸ் போன்ற சமீபத்திய ஹாரர் படங்களுடன் போட்டியிடும் அளவிற்கு இந்த பாகத்தில் சஸ்பென்ஸ் மற்றும் ஹாரர் காட்சிகளை அதிகமாகவே கலந்து உள்ளனர். காட்சிகளும் முந்தைய பாகங்கள் போல் வெறுமனே வெள்ளை உடல் நீண்ட கருத்த முடி சகிதமாக வந்து போகும் சீனப் பெண்கள் அல்லது சீன சிறுவர்கள் என இல்லாமல் இதில் கொஞ்சம் மெனக்கெட்டு வேலை செய்திருக்கின்றனர்.

ஸாகேரி கேலர் ஒளிப்பதிவில் சில காட்சிகளில் லைட்டிங் மற்றும் ஹாரர் சஸ்பென்ஸ் தருணங்கள் உண்மையாகவே அதிர வைக்கின்றன. அதற்கு ஏற்ப தி நியூட்டன் பிரதர்ஸின் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது. மொத்தத்தில் இருட்டு பேய் என்று சொன்னாலே பயப்படுவீர்கள் என்றால் இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும். அட போங்க பாஸ் எங்களுக்கு கான்ஜுரிங்கே தண்ணி பட்ட பாடு என்னும் மக்களுக்கு சாரி பாஸ் இந்தப்படமும் மற்றுமொரு ஹாரர் படமாக கடந்துசெல்லும்.