விமர்சனம்
கனெக்ட் - விமர்சனம்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய் ராய், சத்யராஜ் அனுபம்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திகில் படம் கனெக்ட்.
டாக்டர் கணவர் ஜோசப் பினாய் (வினய்), செல்ல மகள் ஆனா(ஹனியா நஃபீஸ்), பாசமான தந்தை சாமுவேல்(சத்யராஜ்), என சூசனின் (நயன்தாரா) வாழ்க்கை அமைதியாகவும் நிறைவாகவும் சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க கொரோனா எதிரொலி மருத்துவர்கள் மருத்துவமனையிலேயே தங்கி வேலை பார்க்க வேண்டிய சூழல் என ஜோசப் வினாய் மருத்துவமனையிலேயே மாட்டிக்கொள்கிறார். அங்கேயே கொரோனா தொற்று காரணமாக இறந்தும் விடுகிறார். இறந்து போன தந்தையிடம் பேச ஒய்ஜா போர்டு கொண்டு முயற்சி செய்கிறார் அனா. ஆனால் அவளுக்கு உதவுகிறேன் பேர் வழியாக வீடியோ காலில் வரும் நபரோ முற்றிலும் அமானுஷ்யமாக ஒய்ஜா போர்டு வழியாக சூசனின் வீட்டிற்குள் நுழைகிறாள். அந்த கனம் முதல் கெட்ட ஆத்மாவின் ஆட்டம் ஆரம்பிக்கிறது. ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத அளவிற்கு ஊரடங்கு அமலில் இருக்கிறது இந்நிலையில் தன் மகளை பிடித்திருக்கும் கெட்ட ஆத்மாவை சூசன் எப்படி விரட்டினார் என்பது திக் திக் கிளைமாக்ஸ்.
வழக்கம் போலவே தனக்கு கொடுத்த பாத்திரத்தில் எவ்வித குறையும் சொல்ல முடியாத அளவிற்கு நயன்தாரா அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் இப்படத்தில் ஒரு 15 வயது பதின் பருவ பெண்ணுக்கு அம்மா என்று தயக்கம் கூட காட்டாமல் கதாபாத்திரத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டு நடித்த நயன்தாராவிற்கு பாராட்டுக்கள்.
நயன்தாராவிற்கே ஸ்கிரீனில் சவால் வைத்து அரட்டை மிரட்டி உருட்டி இருக்கிறார் ஹனியா நஃபீஸ். பார்ப்பதற்கு அப்பாவி போல் இருந்தாலும் கெட்ட ஆத்மா உள் நுழைந்த பின் அவர் எடுக்கும் அவதாரம் நம்மை சீட்டில் உறைய வைத்து கட்டி போடுகிறது.
மகளுக்கும் பேத்திக்கும் என்ன ஆனதோ என்று ஒரு பக்கம் தவிக்கும் சத்யராஜ் படத்துக்கு தேவையான கதாபாத்திரமாக கதையுடன் கனெக்டில் இருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் உண்மையாகவே கொரோனா காலத்தில் மருத்துவர்கள் பட்ட கஷ்டத்தையும் துன்பத்தையும் கண் முன் மீண்டும் ஒரு முறை காட்டி செல்கிறார் வினய். அனுப்பம்கருக்கும் படத்தில் சிறிது நேரம் தான் வேலை என்றாலும் கதையின் முழுமையே அவர்தான் என்பதற்கு ஏற்ப பக்குவமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஹாரர் படங்களுக்கு திரைக்கதை உடல் என்றால் சினிமோட்டோகிராபியும் பின்னணி இசையும் தான் உயிர். அதனை நன்கு புரிந்து கொண்டு படம் முழுக்க வீடியோ கால் மற்றும் வீட்டின் அறை என நடக்கும் கதைக்குள் ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி . குறிப்பாக நயன்தாரா மற்றும் அவரது மகளாக வரும் ஹனியோ இருவரும் இருக்கும் வீட்டு லொகேஷன் மற்றும் அதன் லைட்டிங் உட்பட திகில் படத்திற்கே உரிய அத்தனை கோட்பாடுகளுடனும் நம்மை மிரட்டுகிறது. அதற்கு மிகச் சிறப்பான ஜோடியாக பிரித்வி சந்திரசேகர் பின்னணி இசை கோர்ப்பு படத்தில் இன்னொரு கதாபாத்திரமாகவே தொடர்கிறது. இடைவேளை இல்லாத முதல் இந்தியத் திரைப்படம் என்னும் டாகிற்கு நியாயம் சேர்க்கும் வகையில் கெவின் ரிச்சர்ட் துல்லியாமான எடிட்டிங்கில் மேலும் மெருகேற்றியிருக்கிரார்.
ஹாலிவுட்டில் 3இம்மாதிரியான வீட்டிற்குள் நுழையும் கெட்ட ஆவி அதனை துரத்தும் குடும்பம் என எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. தமிழிலும் கூட பிடித்த கெட்ட ஆவி அதை விரட்ட போராட்டம் என்னும் கதை பார்த்து பழகியது என்றாலும் திரைக்கதையிலும் பயமுறுத்தும் ஸ்டைலிலும் அதேபோல் மேக்கிங் இல் அப்டேட் லெவல் காண்பித்த அஸ்வின் சரவணனுக்கு பாராட்டுக்கள். ஒரு சில காட்சிகளில் உண்மையாகவே திடுக்கென நம்மை பயமுறுத்தும் டெக்னிக்கும் வைத்தது அருமை. ஆனால் வழக்கமான ஹாலிவுட் பானி தனியறை, பரண்களில் மறைந்து கொள்வது, தலைகீழாக நிற்கும் சிலுவை போன்ற சினிமா ஹாரர் கிளிஷேக்களை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் இனி எப்பேர்ப்பட்ட பேய் படம் வந்தாலும் உண்மையான பேயையே உடன் வைத்துக் கொண்டு பார்க்கும் அளவிற்கு பார்வையாளர்களின் எண்ணங்கள் மாறிவிட்டன. எனினும் பேய் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் இன்னும் எதிர்பார்ப்பை கனெக்ட் நிச்சயம் பூர்த்தி செய்யும்.